தினம்தோறும் மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு திட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான bsnl ஒரு அற்புதமான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம் பெற்ற குரல் அழைப்புகளை வெறும் 997 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி வீதம் மொத்தம் 160 நாட்களுக்கு 320 gb டேட்டாவை வழங்கும். அது மட்டுமல்லாமல் வரம் பெற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ் எம் எஸ். இதன் மூலம் ஒரு ஜிபி டேட்டா 3.11 ரூபாய்க்கு கிடைக்கின்றது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.