பெருநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும், 100 தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெருநாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மொத்தம் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.