
முன்னதாக பள்ளி கல்விக்கான மத்திய அரசின் திட்டத்தின் படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2291 கோடி நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த முன்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்ட அரசு ஏற்க மறுத்தது. இதனால் மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் நிறுவி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டு மாணவ சேர்க்கை இன்னும் தொடங்கவில்லை என்றும் உடனடியாக மாணவ சேர்க்கை தொடங்க உத்தரவிட கோரியும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.