பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகும். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு அரசு போராடும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.