முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வரும் விமர்சித்துள்ளார்.

அதில் நிதி உரிமையை கேட்டால் இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுகிறார். தமிழ்நாட்டைச் சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.