பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம் வழங்கினார். இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 15,906 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் 52.94 கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.