சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர் கொண்ட கும்பல் பிரபல ரவுடியின் காரை விபத்து ஏற்படுத்தினர். அதோடு காரின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்த பிரபல ரவுடியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் இன்று கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூன்று பேரும் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் மற்றொரு கொலையாளியான கார்த்திகேயன் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார்.