நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் அதன் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 200க்கும் அதிகமான ரன்களை குவித்து புள்ளி பட்டியலில் முன்னேறி வந்துள்ளது. சிஎஸ்கே அணியில் ஏற்கனவே எம் எஸ் தோனி காயம் காரணமாக விளையாடாமல் இருக்கிறார். அவர் அடுத்ததாக மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் களம் காண்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சென்னை அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். ‌ மேலும் அவரது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அது குணமாக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.