
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் ஒன்றிய அரசு நிதி வழங்கியது என்று தெரிவித்தார்.
இந்த திட்டங்களுக்காக ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்துக்கு ஒரே ஆண்டில் வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார். உலகில் உள்ள பல நாடுகள் செமி கண்டக்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காகக் கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என்று தெரிவித்தார்.