இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவின் மனைவி அஷ்மிதா விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விஷ்ணு மற்றும் அவரது மனைவி மீது இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 நாட்கள் விசாரணை காவலில் காவல்துறையினர் எடுத்துள்ளனர்.