
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடும் வெப்ப அலை காரணமாக ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதனைப் போலவே ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்ப அலை காரணமாக பீகாரில் பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தனர். நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்ட அவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.