அதிமுகவில் நடைபெற்ற மா.செ. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“விஜய் தலைமையிலான தவெக தலைவர் பேச்சுகளை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை” எனவும், “அண்ணாமலை நம்மை பற்றி பேசுவதில்லை, ஆகவே நீங்களும் எதையும் பேச வேண்டாம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்குள் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், தேவையற்ற கருத்துக்களால் கூட்டணியில் பிளவு தோன்றக்கூடாது என எச்சரித்துள்ளார். அவரது இந்த அதிரடி உத்தரவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
