
திமுக கட்சியின் மாணவர் அணி தலைவராக ராஜீவ் காந்தி இருந்தார். தற்போது இவரை அந்த பொறுப்பிலிருந்து பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுவித்துள்ளார். அவரை திமுக மாணவர் அணி செயலாளராக துரைமுருகன் நியமித்துள்ளார். இதேபோன்று திமுக கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்த சிவிஎம்பி எழிலரசனையும் அப் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளார்.
அவரை தற்போது கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே திமுகவில் மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய பொறுப்பாளர்களையும் மாற்றியுள்ளனர். திமுகவில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.