கர்நாடக சட்டசபை நடந்து கொண்டிருந்த அமர்வில் சட்டசபை செயல்களைப் பாதித்ததோடு, சபாநாயகரை அவமதித்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மீது ஆறு மாத கால சஸ்பெண்ட் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே. படில் தாக்கல் செய்தார். அமர்வின் போது சர்ச்சையை ஏற்படுத்திய இந்த எம்எல்ஏக்களை, மார்ஷல்கள் சட்டசபையிலிருந்து இழுத்து வெளியேற்றும் காட்சியும் ஏற்பட்டது.