
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இனிவரும் காலங்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதற்கான அட்டவணையும் வெளியானது.
