
இஸ்ரேல் மீது காசா முதலில் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து லெபனான் தலைநகர் மீதும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த போரில் இதுவரை ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், கமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அதாவது ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் ஈரான் அதிபரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.