தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் அனைவரும் விசைப்படகுகளுடன் நேற்று மீன் பிடிக்க திரும்பினர். இதனால் சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக இன்று மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

சென்னை காசிமேட்டில் வஞ்சரம் ஒரு கிலோ 1000 முதல் 1200 ரூபாய், இறால் 400 முதல் 1500 ரூபாய், பாறை 350 முதல் 500 ரூபாய், சங்கரா 300 முதல் 500 ரூபாய், வவ்வால் 300 முதல் 600 ரூபாய், நெத்திலி 200 ரூபாய் வரை விற்பனையாகின்றது. இருந்தாலும் விலையை பொருட்படுத்தாது மக்கள் ஆர்வத்துடன் மீன் வாங்கி செல்கின்றனர்.