தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பூவே உனக்காக திரைப்படத்தின் நடித்த போது லண்டனில் வாழும் பிரபல தொழிலதிபரின் மகளான சங்கீதா வரை நேரில் காண வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 27 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தற்போது நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் அந்த விஷயம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே தனக்கு தெரிய வந்ததாகவும் கூறினார். அந்த உறவை நான் கண்டுபிடித்த போது அதிலிருந்து விலகுவதாக விஜய் கூறிய நிலையில் தொடர்ந்து உறவில் இருந்ததால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். எனவே எனக்கு விவாகரத்து வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு பிப்ரவரி 24ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
