கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடிகர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் அவர்களிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற இருந்த நிலையில், இன்று சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், முதலமைச்சர் விஜய் தரப்பில் வழக்கின் விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இதற்குச் சங்கீதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “வழக்கை ஒத்திவைக்கக் கூடாது; சட்டசபை காரணமாக நேரில் வர இயலாவிட்டாலும், இன்றே வீடியோ கான்ஃபரன்ஸ் (Video Conference) மூலமாக இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்” என்று சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அதிரடியாக வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த செங்கல்பட்டு நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தற்போது பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பிற்பகலில் இந்த வழக்கில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
