
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை மேற்கொள்கிறார்கள். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்துகிறார்கள்.
இதேபோன்று கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் இவருடைய வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அதன் எதிரொலியாக அவருடைய மருமகனான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.