
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் முதல் கட்டமாக தபால் வாக்குகளை 2 மேஜைகளில் ஒரே சுற்றாக எண்ணி வருகிறார்கள். இந்த வாக்கு எண்ணிக்கை பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அந்த பகுதியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.