ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், நிலுவையில் உள்ள வணிக வரியை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அவர் பேசியதாவது, வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிலுவையில் உள்ள வணிக வரியை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படும். 25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

ரூபாய் 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளவர்களின் நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூபாய் 50 ஆயிரத்துக்கு கீழ் வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படும்
ரூபாய் 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்ப்படுவர். 1.40 லட்சம் வழக்குகளில் தொடர்புடைய 95, 502 சிறு வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரலாற்றில் வரி, வட்டி, அபராதம் விளக்க அளிப்பது இதுவே முதல் முறையாகும். ரூபாய் 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்பெறுவர். ரூபாய் 10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் மட்டும் போதுமானது” என தெரிவித்துள்ளார்.