
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை விலகி நகர்ந்ததால், கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, முன்னதாக அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்கனவே வானிலை மையம் விடுத்த ரெட் அலர்ட் பின்வாங்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.