தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாஜக எம்பி செல்வகணபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி பாஜக எம்.பி செல்வகணபதி, சூரஜ் பங்கஜ் லால்வாணி ஆகிய மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் வருகிற 25-ம் தேதி நேரில் ஆஜராகி சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என சந்தேகம் எழுந்திருப்பதால் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பாஜக பிரமுகர்களான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்றது.