
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நடப்பாண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் அதே ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு காலை 10:30 மணிக்கு விசாரிக்கிறது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.