
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். மேலும் இந்த உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.