செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டுள்ளேன். இதனால், மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.