தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது சங்கீதா விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் முன்னதாக இருவரும் வீடியோ காணொளி மூலமாக ஆஜராகிய நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. அப்போதும் விஜய் தரப்பிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி அதிரடியாக நிராகரித்த நிலையில் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதோடு இரு தரப்பும் இமெயில் ஐடியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் முதல்வர் விஜய் மீது அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கேட்டிருந்த நிலையில் பின்னர் மனம் மாறி கணவருடன் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த தகவல்கள் உண்மையில்லை என்றே கூறப்படுகிறது.