அதிமுக–பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானாலும், இப்போது தான் அந்த கூட்டணி முழுமையானதாக மாறியுள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

காரணம், எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் அண்ணாமலை ஒரே மேடையில் மீண்டும் தோன்றியிருப்பதே. சமீபத்திய நிகழ்ச்சியில் அண்ணாமலை, “EPS-ஐ மீண்டும் முதலமைச்சராக்க பாஜகவினர் பாடுபட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படையாக காட்டியதாக அரசியல் வட்டாரத்தில் மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக மா.செ. கூட்டத்தில் பேசிய EPS, கட்சியினர் யாரும் அண்ணாமலையை விமர்சித்து பேசக்கூடாது எனவும், கூட்டணி உறவை சீர்குலைக்கும் விதமான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

EPS-ன் இந்த அறிவிப்பு, அதிமுக–பாஜக இடையேயான கூட்டணியை வலுப்படுத்தும் முக்கியச் செய்தியாகக் கருதப்படுகிறது. அடுத்த சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, இந்த அரசியல் இணைவு இரு கட்சிகளுக்கும் புதிய உந்துதலாக அமையும் என மதிப்பிடப்படுகிறது.