
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்து இடப்பட்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.