மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6-வது தேசிய பொதுச் செயலாளராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரை தலைவராக வேண்டும் என்று பிரகாஷ்காரத் பரிந்துரை செய்தார். ‌

இதைத்தொடர்ந்து மதுரையில் நடைபெற்று வரும் அந்தக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6-வது தேசிய பொதுச்செயலாளராக பேபி பதவியேற்க இருக்கிறார்.