கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் திடீரென மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது வெடிச்சத்தம் மற்றும் அதை தொடர்ந்து கிளம்பிய கரும்பு புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து பிற நோயாளிகள் அவசரமாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மாநில அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.