நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேச, பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவி குறித்துத் தொடர்ந்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கெனிஷாவின் இத்தகைய பேச்சுகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கூறி ஆர்த்தி ரவி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்த்தி ரவிக்கு எதிராக எவ்விதமான அவதூறு கருத்துகளையும் வெளியிடவோ அல்லது பேசவோ கூடாது எனப் பாடகி கெனிஷாவுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
