தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு கூட்டணியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் வேட்புமனுவும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போன்று அதிமுக உறுப்பினர்கள் இன்ப துரை மற்றும் தனபால் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மீதம் உள்ளவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் போட்டி இன்றி தேர்வாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‌