பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். இவர் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் அதன் பிறகு முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை கங்கனா ராணாவத் தற்போது மண்டி தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நடிகை கங்கனா இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.