
பிரபலமான எழுத்தாளர் ராஜ் கவுதமன். இவருக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
இவர் தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை தன் எழுத்துக்கள் மூலமாக எடுத்துச் சென்றவர். இவர் ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனம் என அனைத்திலும் நவீன முறையை கையாண்டவர். மேலும் அவருடைய மறைவுக்கு இயக்குனர் பார். ரஞ்சித் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.