தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,  புதிய வரலாற்றை படைக்க தயாராக இருங்கள். நாம் புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?.

மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள். நானும் அடி அடினு அடிக்கனுமா? யோசிக்கிறேன். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது. அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.