
கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.