
இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதில் சூரத், பெல்காம், ஹமீர்பூர் உட்பட 21 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 223 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.