திமுகவில் இணையப்போவதாகவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும் பரவிவரும் வதந்திகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) கடுமையாக மறுத்துள்ளார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் சந்தித்தது, அவருடைய உடல்நிலையை பற்றி விசாரிப்பதற்கும், அவரது சகோதரர் மு.க.முத்து மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவேயாகும். இதில் எந்த அரசியலோ அல்லது கூட்டணி பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை” என OPS வலியுறுத்தினார். தன்னை ‘திமுகவின் B டீம்’ என சிலர் பரப்பும் அவதூறு செய்திகளை OPS கடுமையாக கண்டித்துள்ளார்.

OPS மேலும் தெரிவிக்கையில், “2026 சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியை மீண்டும் நிறுவுவதுவே எங்கள் முக்கிய இலக்காகும்.

எனவே, திமுகவுடன் கூட்டணி அல்லது இணைப்பு என்பது முழுமையாக தவறான செய்தி” எனத் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழலில் OPS கொடுத்துள்ள இந்த விளக்கம், அரசியல் வட்டாரங்களில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றே கூறலாம்..