தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக அதிமுக கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைத்தனர். அதிமுகவில் இருந்த 9 தலைவர்கள் தற்போது திமுக கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கு பின் அதிருப்தி காரணமாக விலகிச் சென்ற பல நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் பழம்பெறும் நடிகையான லதா இன்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டார். மேலும் தேர்தல் நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் இணைவது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.