
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ரயில்வே கேட் மூடாமல் இருந்த நிலையில் பள்ளி வாகனம் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரயில் பள்ளி வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனம் உருக்குலைந்த நிலையில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் தொண்டாமாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் நிவாஸ் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
கேட் மூடப்படாமல் இருந்ததால் பள்ளி வேன் ரயில் வரவில்லை என நினைத்து தண்டவாளத்தை கடந்ததாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆத்திரத்தில் அங்கிருந்த கேட் கீப்பரை பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது கேட் கீப்பர் கேட்டை மூடுவதற்காக வந்த நிலையில் பள்ளி வேன் ஓட்டுனர் தான் மூட வேண்டாம் அதற்குள் நாங்கள் சென்று விடுவோம் என்று கூறியுள்ளார். செம்மாங்குப்பத்தில் இருந்து ரயில் வருவதை அறிந்து கேட் கீப்பர் மூடுவதற்காக சென்றபோது ஓட்டுனர் மூட வேண்டாம் என்று கூறியதாலயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பள்ளி வேன் கடக்கும்போது விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதோடு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவையும் ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது அழைப்பு வந்த பிறகும் பள்ளி வேனை மட்டும் செல்ல அனுமதித்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வருத்தம் தெரிவித்து ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு உயிரிழந்த 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்…
— M.K.Stalin (@mkstalin) July 8, 2025