விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இன்று எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவி செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடைபெறுகிறது. இறந்த குழந்தையின் உடலை பார்த்து நெஞ்சை உருக வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது செப்டிக் டேங்கில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாக கூறிய ஸ்டாலின் சிறுமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.