சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போதைக்கு சிறைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.