பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 குறைந்துள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்து தற்போது 52,400 க்கு விற்பனையாகிறது.

இன்று காலை 6810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது 260 ரூபாய் குறைந்து 6550 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 6825 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.