கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் அஜர்பைஜன் நாட்டில் இன்று காலமானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படபிடிப்பிற்காக அஜர் பைஜான் நாட்டிற்கு மிலன் சென்று இருந்த நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.