2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்தவகையில் தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்று பயிர் சாகுபடி செய்ய 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய ஐந்து கோடியில் உழவர் அங்காடிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.