நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் அடிப்படையில்  உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது, 1563 பேருக்கு மட்டும் மறுதேர்வு நடத்துகிறோம் என்று தேசிய தேர்வு முகமை கூறிய நிலையில் அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.