
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர். அவரது பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நூறு முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என கூறி மன்னிப்பு கேட்டார்.
முன்னதாக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்கப்படும் என தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணிதனமாக கூறிவருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் கல்வி தரம் குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். அவரது கருத்துக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தராததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.