
இந்தியாவின் பிரதமராக 2 முறை இருந்தவர் மன்மோகன் சிங். இவர் வயது மூப்பே மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று காலமானார். அவருடைய உடலுக்கு இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இடங்கள் தெரிவித்து வரும் நிலையில் உலக அளவிலும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11:45 மணிக்கு யமுனை நதிக்கரையில் உள்ள நிகோம்போத் படிக்கறையில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் இறுதிசடங்கு நடைபெற உள்ளது. மேலும் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசிடம் மன்மோகன் சிங்குக்கு யமுனை நதிக்கரையில் தனி நினைவிடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.